கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 12% அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 12% அதிகரிப்பு

by Staff Writer 30-07-2022 | 4:32 PM

Colombo (News 1st) கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10% முதல் 12% வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை மீண்டும் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் COVID-19 ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

COVID தடுப்பூசிகள் குறித்து மக்கள் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டாம் எனவும் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.

60 வயதிற்கும் மேற்பட்ட சுமார் ஒரு மில்லியன் மக்கள் இதுவரை பூஸ்டர் மற்றும் 4 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நால்வர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

நேற்று 143 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.