.webp)
Colombo (News 1st) நிலவும் எரிபொருள் நெருக்கடியால் கடிதங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தபால் அலுவலக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டார்.
ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க முடியாமல் உள்ளதுடன், தபால்களை விநியோகிப்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், திணைக்களத்தின் வாகனங்கள் மற்றும் லொறிகளை பயன்படுத்தி இயன்றளவு தபால்களை விநியோகிப்பதாகவும் பிரதி தபால்மா அதிபர் தெரிவித்தார்.
அத்துடன், ரயில்களூடாகவும் தபால்களை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சில பகுதிகளுக்கு தபால்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என தபால் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.