நியூஸ்ஃபெஸ்ட்  ஊடகவியலாளர்களிடம் SLHRC விசாரணை

நியூஸ்ஃபெஸ்ட்  ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by Bella Dalima 29-07-2022 | 7:41 PM

Colombo (News 1st) ஜூலை 9 ஆம் திகதி நியூஸ்ஃபெஸ்ட்  ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

நியூஸ்ஃபெஸ்ட்டின் ஊடகவியலாளர்களான ஜூடின் சிந்துஜன் மற்றும் ஜனித்த மென்டிஸ் ஆகியோர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த புதன்கிழமை MTV Channel தனியார் நிறுவனம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியது.

நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் ஊடக சுதந்திரம் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் நிறுவனம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.