பெத்தும் கேர்னருக்கு விளக்கமறியல்

சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு ஆகஸ்ட்  4 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Bella Dalima 29-07-2022 | 7:23 PM

Colombo (News 1st) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல முன்னிலையில் அவரை இன்று ஆஜர்படுத்திய போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியதாக பெத்தும் கேர்னர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் தண்டனை சட்டக்கோவை மற்றும் பொதுச்சொத்துகள் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், குற்றம் இழைத்துள்ளதாக தெரிவித்து அவர் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொல்துவ சந்தியிலிருந்து பொதுமக்களை அங்கு வருகை தருமாறு பல்வேறு வழிமுறைகளூடாக அவர் அறிவித்ததுடன், அங்கு வருகை தந்தவர்களுடன் இணைந்து பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக இடப்பட்டிருந்த வீதித் தடைகளை உடைப்பதற்கு மக்களை ஊக்கப்படுத்தியதாக பெத்தும் கேர்னர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.