.webp)
Colombo (News 1st) முன்பதிவு செய்யப்படும் ஆசனங்களுக்கான கட்டணம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கு முன்பதிவு செய்து ஒதுக்கப்படும் ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர குறிப்பிட்டார்.
கடந்த 22 ஆம் திகதி ரயில் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு அமைய, முன்பதிவு செய்யப்படும் ஆசன கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.