.webp)
Colombo (News 1st) பொது சொத்துகளுக்கு தேசம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அந்தனி வேரங்க புஷ்பிகா டி சில்வா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, அடையாள அணிவகுப்பிற்காக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
சந்கேநபர் நேற்று கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே 19 ஆம் திகதி மற்றும் ஜூன் 09 ஆம் திகதி கொழும்பு கோட்டை பகுதியிலும் ஜூன் 10 ஆம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சிற்கு முன்பாகவும் நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முறையற்ற விதத்தில் அழுத்தம் விடுத்தமை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
27 வயதான குறித்த சந்தேகநபர், தொடங்துவயை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.
போராட்டக்கள செயற்பாட்டாளரான வேரங்க புஷ்பிக்க, ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் என்பதுடன், அவரின் கல்வி தகைமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.