ரணில் விக்ரமசிங்கவுடன் சாரா ஹல்டன் கலந்துரையாடல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சாரா ஹல்டன் கலந்துரையாடல்

by Bella Dalima 28-07-2022 | 9:34 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நிதி அமைச்சில் இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப மனித உரிமைகளையும் உரிய செயற்பாடுகளையும் மதித்து, அமைதியான, ஜனநாயக மற்றும் திறந்த வௌி செயற்பாடுகள் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.