.webp)
ஈராக் - பாக்தாத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி அந்நாட்டின் பாராளுமன்ற கட்டடத் தொகுதியை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஈராக்கின் பிரதமராக முகமது அல் சூடானி பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்தாத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாக ஷியா தலைவரின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்து சபாநாயகர் மேசையில் உறங்கியும் நடனமாடியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலை அடுத்து பிரதமர் வேட்பாளர் தெரிவில் கூட்டணி கட்சிகளுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது.
இதனால் இடைக்கால பிரதமராக முஸ்தபா அல் காதிமி செயற்பட்டு வருகிறார்.
இந்நிலையில், புதிய பிரதமர் தெரிவிற்கான தேர்தல் நடைபெறவுள்ளதுடன், இதில் முகமது அல் சூடானி பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் பிரதமராக தெரிவு செய்யப்படலாம் என கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.