.webp)
Colombo (News 1st) 28 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 26, 2022 என திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானி ஜனாதிபதி செயலாளர், சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
1. R. W. R. பேமசிறி – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு 2. M. M. P. K. மாயாதுன்னே – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 3. K.D.S. ருவன்சந்திர - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு 4. S.T. கொடிகார – வாணிபம், வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் 5. W. A. சூலானந்த பெரேரா – சுற்றுலா மற்றும் காணி அமைச்சு 6. திருமதி வசந்தா பெரேரா – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு 7. S. ஹெட்டியாராச்சி – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு 8. ஜெனரல் கமல் குணரத்னா – பாதுகாப்பு அமைச்சு 9. M.N. ரணசிங்க – கல்வி அமைச்சு 10. M. P. D. U, K. மாபா பத்திரண – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு 11. R.M.I. ரத்நாயக்க – மீன்பிடி அமைச்சு 12. H. K. D. W. M. N. B. ஹப்புஹின்ன – பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு 13. N. B. மொன்டி ரணதுங்க – நீர் வழங்கல் அமைச்சு 14. U. D. C. ஜெயலால் – நீர்ப்பாசன அமைச்சு 15. கலாநிதி அனில் ஜாசிங்க – சுற்றாடல் அமைச்சு 16. அனுஷா பல்பிட்ட – வெகுஜன ஊடக அமைச்சு 17. M.B.R.புஷ்பகுமார – விவசாய அமைச்சு 18. சோமரத்ன விதானபத்திரன – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு 19. K.M.M. சிறிவர்தன – நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு 20. அருணி விஜேவர்தன – வெளிவிவகார அமைச்சு 21. B. L. A. J. தர்மகீர்த்தி – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 22. R. M. C. M. ஹேரத் – வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு 23. S. J. S. சந்திரகுப்தா – சுகாதார அமைச்சு 24. P. H. C. ரத்நாயக்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு 25. R. P. A. விமலவீர – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு 26. கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 27. J. M. T. ஜயசுந்தர – கைத்தொழில் அமைச்சு 28. பேராசிரியர் N.D. குணவர்தன – தொழில்நுட்ப அமைச்சு
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.