துப்பாக்கிச்சூட்டில் பஸ் பொட்டா காயம்

கம்பஹா நீதிமன்றம் அருகில் துப்பாக்கிச்சூடு: பஸ் பொட்டா உள்ளிட்ட நால்வர் காயம்

by Bella Dalima 27-07-2022 | 5:54 PM

Colombo (News 1st) கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பஸ் பொட்டா 'PAS PODDA' உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைகளுக்காக பஸ் பொட்டா உள்ளிட்ட 06 பேரை கெப் வண்டியில் அழைத்துச்சென்ற போதே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரொன்றில் பயணித்தவர்கள் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.