சிசுக் கொலை தொடர்பில் சாய்ந்தமருது வைத்தியர் கைது

2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிசுக் கொலை தொடர்பில் சாய்ந்தமருது வைத்தியர் கைது

by Bella Dalima 26-07-2022 | 5:36 PM

Colombo (News 1st)  சிசுவின் மூச்சை நிறுத்தி கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் 2017 ஆம் ஆண்டு சிசுவொன்றின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருதை சேர்ந்த 36 வயதான வைத்தியர், கண்டி வைத்தியசாலையில் பணியாற்றி வந்துள்ளார்.

கொலை சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வாடகை வீட்டில் வேலைசெய்த பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், அந்த சிசுவை கொலை செய்து கிணற்றில் வீசியமை தொடர்பில் சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.