தன்னாமுனையில் கோர விபத்து: இளைஞர்கள் இருவர் பலி

தன்னாமுனையில் கோர விபத்து: இளைஞர்கள் இருவர் பலி

by Bella Dalima 26-07-2022 | 8:44 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - தன்னாமுனையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

தன்னாமுனையை சேர்ந்த 19 மற்றும் 21 வயதான இரண்டு நண்பர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இளைஞர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஏறாவூரிலிருந்து தன்னாமுனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் வீதியில் வீழ்ந்திருந்த போது, எதிர் திசையில் பயணித்த கனரக டிப்பர் அவர்கள் மீது ஏறியுள்ளது.

சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். டிப்பர் சாரதி தலைமறைவாகியுள்ளார். 

ஏறாவூர் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.