கப்ரால் மீதான வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

by Staff Writer 25-07-2022 | 3:45 PM

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல, பயணத்தடையை நீடித்து இன்று(25) உத்தரவிட்டார்.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாட்டினை ஆராய்ந்து, இன்று(25) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

06 குற்றச்சாட்டுகளின் கீழ், அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.