.webp)
Colombo (News 1st) காலி எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சோதனையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு குறித்த நபர் இடையூறு விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பட்டதூவே பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.