வீதியோரத்திலிருந்து சிசு உயிருடன் மீட்பு

வீதியோரத்திலிருந்து பிறந்து 3 நாட்களேயான சிசு மீட்பு

by Staff Writer 24-07-2022 | 5:38 PM

Colombo (News 1st) கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு(23) பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய துணியால் சுற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிசு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அக்கராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.