.webp)
Colombo (News 1st) ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
பயணச்சீட்டிற்கான கட்டணம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளிக்கப்பட்டதை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக, தமது சேவைகள் இன்று(24) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.