பொலிஸாரை தாக்கி எரிபொருள் பெற முயன்ற இருவர் கைது

பொலிஸாரை தாக்கி எரிபொருள் பெற முயன்ற இருவர் கைது

by Staff Writer 24-07-2022 | 3:04 PM

Colombo (News 1st) குருணாகல் - கோனகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாரை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வந்த குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பலவந்தமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சி செய்துள்ளதாகவும் இதன்போது தடுக்கவந்த பொலிஸாரை தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பின்னர் 40 வயதான குறித்த சந்தேகநபர் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிலியந்தலை - மடபாத பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளுக்காக இரு தடவைகள் எரிபொருளை பெற்றுக் கொள்ள குறித்த சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் 43 வயதான சந்தேகநபர் ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.