by Bella Dalima 23-07-2022 | 8:45 PM
Colombo (News 1st) கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான நீல வர்ணங்களின் மோதல் வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான 143 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது.
புனித தோமஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கட்களையும் இழந்து, 242 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி அணி 8 விக்கட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இரண்டாம் இன்னிங்ஸில் புனித தோமஸ் அணி 4 விக்கட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டபோது, போட்டி இடைநிறுத்தப்பட்டது.
ரயன் பெர்னாண்டோ 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் ரோயல் கல்லூரி அணித் தலைவர் கிஷான் பாலசூரிய 3 விக்கட்களை கைப்பற்றினார்.
அதன்படி, 2019-இல் சாம்பியனான கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கு D.S.சேனாநாயக்க நினைவுக்கேடயத்தை தம்மிடம் வைத்திருப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.