ரணில் விக்ரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து 

by Bella Dalima 23-07-2022 | 7:31 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி Xi Jinping வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  தீர்வு வழங்க முடியும் என சீன ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு தரப்பிற்கு இடையிலான கலாசார ரீதியான நட்பு மற்றும் அரசியல் ரீதியிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தி, நேர்த்தியான ஒத்துழைப்பு, நிலையான நட்புறவு உள்ளிட்ட மூலோபாயங்களின் மூலம் கூட்டு முயற்சியை முன்னோக்கி கொண்டு 
செல்ல முடியும் என தாம் நம்புவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.