கடந்த 48 மணித்தியாலங்களில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு 

கடந்த 48 மணித்தியாலங்களில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு 

கடந்த 48 மணித்தியாலங்களில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Bella Dalima

23 Jul, 2022 | 8:33 pm

Colombo (News 1st) கடந்த 48 மணித்தியாலங்களில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொத்துவிலில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்

அவர் வரிசையில் காத்திருந்த போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்த 3 பேர் நேற்று (22) உயிரிழந்தனர்

ஊரகஸ்மங்ஹந்திய, கிண்ணியா மற்றும் மத்துகம பகுதிகளிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை,  தேசிய அனுமதி பத்திரத்திற்கு அமைய எரிபொருள் கோட்டாவை வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டது.

திங்கட்கிழமை முதல் தேசிய அனுமதி பத்திரத்திற்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்திற்கு அமைய CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில், இன்றும் பல இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்