அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 70% வீழ்ச்சி

அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 70% வீழ்ச்சி

அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 70% வீழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

23 Jul, 2022 | 7:04 pm

Colombo (News 1st) அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S. வீரகோன் தெரிவித்தார்.

சராசரியாக அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 30 மில்லியனுக்கும் அதிகமாகவிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இந்நாட்களில் நாளாந்த வருமானம் 8 மில்லியனாக குறைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S. வீரகோன் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை கடந்த ஒரு மாதமாக நாளாந்தம் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்