புதிய அமைச்சரவை பதவியேற்பு 

by Bella Dalima 22-07-2022 | 2:41 PM
புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தது.
  • டக்ளஸ் தேவானந்தா -  கடற்றொழில் அமைச்சர்
  • பந்துல குணவர்தன - போக்குவரத்து,  பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
  • கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
  • மஹிந்த அமரவீர - விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
  • விஜேதாச ராஜபக்ஸ - நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
  • ஹரின் பெர்னாண்டோ - சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
  • ரமேஷ் பத்திரன - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
  • பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
  • விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, மத விவகார மற்றும்  கலாசார விவகார அமைச்சர்
  • அலி ஷப்ரி - வெளிவிவகார அமைச்சர்
  • கஞ்சன விஜேசேகர - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
  • ஹாபிஸ் நசீர் அஹமட் -  சுற்றாடல் அமைச்சர்
  • ரொஷான் ரணசிங்க - விளையாட்டுத்துறை  மற்றும் இளைஞர் விவகாரம், நீர்ப்பாசன அமைச்சர்
  • மனுஷ நாணயக்கார - தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
  • டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
  • நளின் பெர்னாண்​டோ - வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்