பாதுகாப்பு செயலாளராக கமல் குணரத்ன மீண்டும் நியமனம்

பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமனம்

by Bella Dalima 22-07-2022 | 5:54 PM

Colombo (News 1st) இன்று (22) முதல்  அமுலாகும் வகையில் பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

கமல் குணரத்ன, இலங்கை இராணுவத்தில் சிறந்த சேவையாற்றிய கீர்த்திமிகு அதிகாரியாவார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, 53 ஆவது படைப்பிரிவின் தளபதியாக அவர் செயற்பட்டிருந்தார்.