.webp)
Colombo (News 1st) தேயிலை செய்கைக்காக 20,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை விநியோகிப்பதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
யூரியா உரமானது சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
சிறு தேயிலை தோட்ட சங்கம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளூடாக யூரியா உரம் விநியோகிக்கபடவுள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்தார்.
இந்த யூரியா உரத்தை நிவாரண விலையில் செய்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.