.webp)
Colombo (News 1st) ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதிவியேற்றதால், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்க, இன்று முற்பகல் இலங்கையில் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.