பிரதமர் பதவி தொடர்பில் கட்சி ஆராயும்

பிரதமர் பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும்: ரஞ்சித் மத்தும பண்டார 

by Bella Dalima 21-07-2022 | 6:47 PM

Colombo (News 1st) பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

பிரதமர் பதவிக்கான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், கட்சியின் செயற்குழு கூடி அது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் முன்னேற்றம் குறித்து சிந்திக்காது, நாடு தொடர்பில் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.