நெல்லிகல வாவியில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

நெல்லிகல வாவியில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

by Staff Writer 21-07-2022 | 8:27 AM

Colombo (News 1st) பேராதனை, நெல்லிகல வாவியில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

குறித்த இளைஞர்கள் வாவியில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டகலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.