கோட்டாபயவிற்கு குறுகிய கால விசா வழங்கப்பட்டுள்ளது

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் தெரிவிப்பு

by Bella Dalima 21-07-2022 | 7:52 PM

Colombo (News 1st) ஜுலை 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஸ விமானம் மூலம் நாட்டிற்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் இந்த குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக  இந்தியாவின் NDTV செய்தி வௌியிட்டுள்ளது

பொதுவாக இலங்கையர்களுக்கு  30 நாட்களுக்கு விசாவை நீடிக்க முடியுமெனவும் அதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியுள்ளதாகவும்  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.