.webp)
Colombo (News 1st) இன்று (21) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமை தொடர்பிலான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெருக்கடியிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயார் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய இணக்கப்பாட்டிற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை பலப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறில்லாமல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொடுத்தால் நாட்டின் தேசிய வளங்கள் அழிவடைந்து போகும் என எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.