இந்திய குடியரசுத் தலைவராக  திரௌபதி முர்மு தெரிவு

இந்திய குடியரசுத் தலைவராக  திரௌபதி முர்மு தெரிவு

by Bella Dalima 21-07-2022 | 8:47 PM

India: இந்தியாவின் 15 ஆவது குடியரசுத்  தலைவராக திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது பழங்குடியின பெண் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

இந்தியாவின் 15 ஆவது  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பு கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றிருந்ததுடன், வாக்கெண்ணும் பணிகள் இன்று நடைபெற்றன. 

இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டன.

பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆளும் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், சற்று முன்னர் வாக்குகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராக தெரிவாகியுள்ளார்.

இதனை முன்னிட்டு இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட  64 வயதான திரௌபதி முர்மு, 2015 முதல் 2021 வரை ஜார்கண்டு மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி அவர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.