பஸ் கட்டணம் 2.23 வீதத்தால் குறைப்பு

பஸ் கட்டணம் 2.23 வீதத்தால் குறைப்பு

by Staff Writer 20-07-2022 | 7:11 AM
Colombo (News 1st) நேற்று(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணம் 2.23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆரம்ப பஸ் கட்டணம் 40 ரூபாவிலிருந்து 38 ரூபா வரை 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, பஸ் கட்டணமும் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.