3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இன்றும் (20) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு

by Staff Writer 20-07-2022 | 8:12 AM
Colombo (News 1st) இன்றும் 03 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, A முதல் W வரையான வலயங்களில் காலை வேளையில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.