தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு அமைய நாளை (21) முதல் எரிபொருள் விநியோகம் 

தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு அமைய நாளை (21) முதல் எரிபொருள் விநியோகம் 

தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு அமைய நாளை (21) முதல் எரிபொருள் விநியோகம் 

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2022 | 6:37 pm

Colombo (News 1st) தேசிய எரிபொருள் அனுமதி அட்டைக்கு அமைய, எரிபொருள் கோட்டாவை விநியோகிக்கும் மாதிரித் திட்டம் நாளை (21) முதல் மூன்று நாட்களுக்கு கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

எரிபொருள் அனுமதி அட்டை நடைமுறைக்கு வரும் வரை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 1,500 ரூபாவிற்கும் முச்சக்கரவண்டிக்கு 2000 ரூபாவிற்கும் ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவிற்கும் அதிகபட்சமாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கங்களுக்கு அமைய ஒதுக்கப்பட்ட நாட்களில் நாளை முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்கனவே பல நாட்களாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்