இலங்கையர்கள் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

திருகோணமலை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

by Staff Writer 19-07-2022 | 4:23 PM

Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த மேலும் ஏழு பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் படகு மூலம் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - நாவற்குழியை சேர்ந்த மூவரும், திருகோணமலை ஆனந்தபுரி மூன்றாம் கட்டையை சேர்ந்த நான்கு பேரும் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். தனுஸ்கோடியை இன்று காலை சென்றடைந்த இவர்கள் 7 பேரும் கடலோர காவற்படையினரால் மண்டம் முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 123 இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.