ஜனாதிபதி பதவிக்காக மூவர் போட்டி

ஜனாதிபதி பதவிக்காக மூவர் போட்டி

ஜனாதிபதி பதவிக்காக மூவர் போட்டி

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2022 | 2:17 pm

Colombo (News 1st) நாளைய தினம்(20) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள ஜனாதிபதி பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூவரின் பெயர்கள் இன்று(19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.

ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தினேஷ் குணவர்தனவினால் முன்மொழியப்பட்டுள்ளதுடன், மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் முன்மொழிந்த நிலையில், ஹரினி அமரசூரியவினால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து தாம் விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்