இன்று(19) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம்

இன்று(19) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம்

இன்று(19) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம்

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2022 | 10:49 am

Colombo (News 1st) இன்று(19) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒப்பீட்டளவிலான வீதத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, பஸ் கட்டணத் திருத்தங்களை மேற்கொள்ள தயார் என பஸ் சங்கங்கள் நேற்று(18) தெரிவித்திருந்தன.

கடந்த 17ஆம் திகதி இரவு 10 மணி முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் புதிய விலைகள்:-

⭕ 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை – 450/=
⭕ 95 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை – 540/=)
⭕ டீசலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை – 440/=) மற்றும்
⭕ சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை – 510/= குறைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்