அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2022 | 5:32 pm

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பல்பொருள் அங்காடியில் ஆயுதம் ஏந்திய நபா் துப்பாக்கியால் சுட்டதில் 3 போ் பலியாகியுள்ளனர்.

பொதுமக்களில் ஒருவா் அந்நபரை சுட்டுக் கொன்றுள்ளார்.

இண்டியானா மாகாணம், கிரீன்வுட் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

துப்பாக்கியுடன் அந்த அங்காடிக்குள் நுழைந்த ஒரு நபா், அங்குள்ள உணவகத்தில் அமா்ந்திருந்தவா்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினாா்.

இதில் மூவா் உயிரிழந்தனா். பொதுமக்களில் ஒருவா் துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபரும் உயிரிழந்தாா் என கிரீன்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கிரீன்வுட் நகரில் நடந்த இத்தாக்குதல் பொதுமக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்