by Staff Writer 18-07-2022 | 3:08 PM
Colombo (News 1st) எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதுவரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.