by Staff Writer 18-07-2022 | 4:04 PM
Colombo (News 1st) புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுவை சமர்ப்பிக்க இன்னும் சில மணித்தியாலங்களே காணப்படுகிறது.
நாளை மறுதினம் 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி தெரிவுக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.