பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

by Staff Writer 18-07-2022 | 2:58 PM
Colombo (News 1st) எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, பஸ் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள தயார் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தேசிய கொள்கைக்கு அமைய பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் கட்டணம் 04 வீதத்திற்கு மேல் அதிகரிக்கப்பட்டாலோ, குறைப்பட்டாலோ, அதற்கமைய பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய வகையில் எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில், பஸ் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள தயார் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்றிரவு(17) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. அதனடிப்படையில் புதிய விலைகள்:- ⭕ 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை – 450/= ⭕ 95 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை – 540/=) ⭕ டீசலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை – 440/=) மற்றும் ⭕ சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை – 510/= குறைக்கப்பட்டுள்ளது.