களுவாஞ்சிக்குடி வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

by Staff Writer 18-07-2022 | 3:35 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.