கட்டுநாயக்கவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை

கட்டுநாயக்கவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை

by Staff Writer 18-07-2022 | 3:19 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க - மஹகம பகுதியில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் நேற்றிரவு(17) கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சென்றுகொண்டிருந்த போது, குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மஹகம பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த சிலர், வாள்களால் வெட்டி குறித்த நபரை கொலை செய்துள்ளதாகவும் தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.