பதில் ஜனாதிபதியின் விசேட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை அறிக்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் - பதில் ஜனாதிபதி 

by Staff Writer 18-07-2022 | 7:10 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பிரித்தானியா மற்றும் அந்நாட்டு பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணை அறிக்கைகளும் மீண்டுமொருமுறை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என பதில் ஜனாதிபதி இன்று(18) விடுத்த விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.