ஜப்பானிய தீவு கரையிலிருந்து 30 கடலாமைகளின் உடல்கள் மீட்பு 

ஜப்பானிய தீவு கரையிலிருந்து 30 கடலாமைகளின் உடல்கள் மீட்பு 

ஜப்பானிய தீவு கரையிலிருந்து 30 கடலாமைகளின் உடல்கள் மீட்பு 

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2022 | 5:20 pm

Colombo (News 1st) ஜப்பானின் தொலைவிலுள்ள தீவொன்றின் கரையிலிருந்து குறைந்தது 30 கடலாமைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவற்றின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

குமேஜிமா தீவில் வசிப்பவர்கள் கடந்த வியாழக்கிழமை இறந்த கடலாமைகளைக் கண்டுபிடித்திருந்தனர்.

ஆழமற்ற அலைப்பகுதி அவற்றை வௌிக்காட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆமைகளை மீன்பிடி வலைகளிலிருந்து விடுவிக்க மீனவரெவராவது முயற்சித்த போது அவற்றுக்குக் காயமேற்பட்டிருக்கலாமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்