அவசரகால நிலை பிரகடனத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

அவசரகால நிலை பிரகடனத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

அவசரகால நிலை பிரகடனத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2022 | 4:22 pm

Colombo (News 1st) பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக நீக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்து வௌியிடும் உரிமை, பேச்சுச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட வௌிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.

இவை மக்களின் இறைமை எனவும் அதனை அரசாங்கமோ, முகவர்களோ மீறுவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்