மீண்டும் தலைதூக்கும் கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதாக எச்சரிக்கை

by Staff Writer 17-07-2022 | 3:08 PM
Colombo (News 1st) நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த நாட்களில் நாளாந்தம் சுமார் 10 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், தற்போது நாளாந்தம் 25 கொரோனா நோயாளர்கள் பதிவாகுவதாக அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறினார். அதன் காரணமாக சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.