ஜீ.எல். பீரிஸுக்கு விரைவில் பதில் அனுப்பப்படும் – சாகர காரியவசம்

ஜீ.எல். பீரிஸுக்கு விரைவில் பதில் அனுப்பப்படும் – சாகர காரியவசம்

ஜீ.எல். பீரிஸுக்கு விரைவில் பதில் அனுப்பப்படும் – சாகர காரியவசம்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2022 | 2:14 pm

Colombo (News 1st) ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான கட்சியின் தீர்மானம் குறித்து தௌிவுபடுத்துமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அனுப்பியுள்ள கடிதத்திற்கு விரைவில் பதில் வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என நியூஸ்பெஸ்ட் வினவிய போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது, தமது கட்சியின் பெரும்பான்மையானோரின் நிலைப்பாடு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்