ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ரவூப் ஹக்கீம்

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ரவூப் ஹக்கீம்

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – ரவூப் ஹக்கீம்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2022 | 2:41 pm

Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் இணக்கம் தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக முன்வருவோர், பதவி நிலை பாராது, பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில் செயற்பட வேண்டும் என நியூஸ்பெஸ்ட் வினவிய போது, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதனூடாகவே தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது சில மோசடி குழுக்களாக பிளவுபட்டுள்ளதாகவும் ஒரு தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்சிக்குள் இணக்கப்பாடு இல்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்