சாகர காரியவசத்திடம் விளக்கம் கோரி GL.பீரிஸ் கடிதம்

சாகர காரியவசத்தின் அறிக்கைக்கு விளக்கம் கோரி G.L.பீரிஸ் கடிதம்

by Bella Dalima 16-07-2022 | 3:41 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் G.L.பீரிஸ், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி தெரிவின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதாக நேற்று (15) சாகர காரியவசம் வௌியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் பேராசிரியர் G.L.பீரிஸ் 6 கேள்விகளை முன்வைத்துள்ளார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்​பெறவுள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை விடுத்தீர்கள் என பேராசிரியர் G.L.பீரிஸ், சாகர காரியவசத்திடம் வினவியுள்ளார். இந்த தீர்மானத்தை எடுக்கும் போது கலந்துகொண்டவர்களின் பெயர்களை குறிப்பிட முடியுமா எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாப்பின் பிரகாரமா இந்த தீர்மானத்தை எடுத்தீர்கள் என்ற கேள்வி உள்ளிட்ட 6 கேள்விகளுக்கு மிக விரைவில் பதில் வழங்குமாறும் பேராசிரியர் G.L.பீரிஸ் சாகர காரியவசத்தை வலியுறுத்தியுள்ளார்.