மரக்கறி, கடல் உணவுகளின் விலைகள் அதிகரிப்பு

மரக்கறி, கடல் உணவுகளின் விலைகள் அதிகரிப்பு

மரக்கறி, கடல் உணவுகளின் விலைகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Jul, 2022 | 4:55 pm

Colombo (News 1st) சந்தையில் மரக்கறி மற்றும் கடல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

எரிபொருள் நெருக்கடியினால் குறைந்தளவு மரக்கறிகளே சந்தைக்கு கொண்டுவரப்படுவதாக பேலியகொட மெனிங் சந்தையின் வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வழமையாக சுமார் 150 மரக்கறி லொறிகள் சந்தைக்கு வருகை தரும் நிலையில், தற்போது சுமார் 10 லொறிகளில் மாத்திரமே மரக்கறிகள் கொண்டுவரப்படுவதாக சங்கத்தின் தலைவர் W.M. உபசேன தெரிவித்தார்.

இதனால் ஒரு கிலோ போஞ்சி 300 ரூபா முதல் 400 ரூபாவிற்கிடையிலும் ஒரு கிலோ 250 முதல் 300 ரூபா வரையிலும் கோவா ஒரு கிலோ 220 ரூபா முதல் 250 ரூபா வரையிலும் உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோ 360 ரூபா முதல் 400 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடல் உணவுகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக பேலியகொட மீன் சந்தையின் வர்த்தக சங்கம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்